கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பு மஹான் குராஸானி பீர் குல் முஹம்மது நக்ஷபந்தி (ரஹ்) அவர்கள், குராஸானிலிருந்து கொழும்பு வழியாக சென்னை மண்ணடியில் கால்பதித்தார்கள். ஹள்ரத் அவர்களின் தஃவாப் பணிகளுக்கிடையில், கோவளம் தமீம் அன்ஸாரி (ரலி) அவர்களின் அடக்கஸ்தலத்திற்கு ஜியாரத் செய்ய நடைபயணமாக செல்வது வழக்கம் செல்லும் பாதையில் ஓய்வெடுக்க ஏதேனும் ஒரு இடத்தில் தங்குவார்கள். அந்த இடமே நமது அடையாறு பள்ளிவாசல். நமது ஹள்ரத் அவர்கள் அவ்வாறு தங்கும் வேளையில் மனதில் அடையார் பகுதியில் ஒரு பள்ளிவாசல், மதரஸா மற்றும் கபருஸ்தான் ஏற்படுத்த வேண்டும் என்று தங்கள் சொந்த பணத்தில் நம் அடையாறு குராஸானி பீர் பள்ளிவாசல் இடத்தை வாங்கி வக்ஃப் செய்தார்கள்.
ஹள்ரத் அவர்கள் பள்ளிவாசலுடன் சேர்ந்து ஓர் அரபிக் கல்லூரியை துவங்கி நடத்த வேண்டும் என்ற நிய்யத் மற்றும் துஆவின் பலனாக 20-08-2014 அன்று நமது பள்ளிவாசல் வளாகத்தில் வேலூர் ஜாமிஆ அல்-பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியின் முன்னால் முதல்வர் ஷைகுத் தஃப்சீர் கண்ணியத்திற்குரிய எங்களின் ஆசிரியத் தந்தை மெளலானா மெளலவி. P.S.P ஜைனுல் ஆபிதீன் ஹழ்ரத் அவர்கள் மற்றும் லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் ஷைகுல் ஹதீஸ் A.E.அப்துர் ரஹ்மான் ஹள்ரத் ஆகியோரின் நல்லாசியோடும், துஆவோடும் துவங்கப்பட்டதுதான் ஜாமிஆ அல்ஹுதா அரபிக் கல்லூரி.
அல்லாஹ்வின் பேருதவியால் 2014-ஆம் ஆண்டு சுமார் 60 மாணவர்களுடன் துவங்கப்பட்ட ஜாமிஆ அல்ஹுதா இன்று சுமார் 160 மாணவர்களைக் கடந்து கல்விப் பணியின் வளர்ச்சிப்பாதையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மஸ்ஜிதுன் நபவியுடன் ஸூஃப்பா (திண்ணை மத்ரஸா) நடைபெற்றதுபோல்……நமது அடையார் குராசானி பீர் பள்ளிவாசலில் ஜாமிஆ அல்ஹுதாவும் இரு கல்விமுறையுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது (அல்ஹம்துலில்லாஹ்).
தமிழகத்தின் முக்கிய உலமா பெருமக்களெல்லாம் நமது கல்லூரிக்கு வருகை தந்து வாழ்த்தி துஆ செய்துள்ளனர். எல்லாம் வல்ல அல்லாஹ் அடையார் குராசானி பீர் பள்ளிவாசலின் சங்கைக்குரிய நிர்வாகிகள், மஹல்லாவாசிகள் அனைவருக்கும் நிறைந்த நற்கூலிகளை வழங்குவானாக
ஆமீன் யாரப்பல் ஆலமீன்……
நோக்கம் :
காலத்தின் சவால்களை எதிர்கொள்ளும் தகுதியும் திறமையும் வாய்ந்த, புதிய தலைமுறை அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் சார்ந்த உலமாக்களை வார்த்தெடுக்கும் மகத்தான முயற்சி !!!
கல்வி முறை :
முழுமையாக ஏழு வருடங்கள் சில்சிலா நிஜாமிய்யா பாடத்திட்ட அடிப்படையில், ஆலிம் பட்டப்படிப்புடன் தற்கால உலகக் கல்வி, தமிழ் மற்றும் ஆங்கில வழியில் (Both Tamil And English Medium) கற்பிக்கப்படுகிறது.
Arabic and Academic structure
YEAR | ARABIC | ACADEMIC | BOARD / UNIVERSITY |
I | 1st ZUMRA | 9th STANDARD | STATE BOARD |
II | 2nd ZUMRA | 10th STANDARD | STATE BOARD |
III | 3rd ZUMRA | 11th STANDARD | STATE BOARD |
IV | 4th ZUMRA | 12th STANDARD | STATE BOARD |
V | 5th ZUMRA | B.Com – I year | MADRAS UNIVERSITY |
VI | 6th ZUMRA | B.Com – II year | MADRAS UNIVERSITY |
VII | 7th ZUMRA | B.Com – III year | MADRAS UNIVERSITY |
வகுப்பு நேரங்கள் :
காலை 6.30-லிருந்து 7.30-மணி வரை பொதுத்தேர்வு எழுதக் கூடிய மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் நடைபெறும்.
காலை 8.30-லிருந்து 12.00-மணி வரை அரபி வகுப்புகளும், மதியம் 2.15 –லிருந்து மாலை 4.30-மணி வரை உலகக் கல்விக்கான பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் நடைபெறும்.
நுழைவுத் தேர்வு :
- நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஒவ்வொரு வருடமும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கல்லூரி அலுவலகத்தில் வழங்கப்படும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நுழைவுத்தேர்வு நடைபெறும் நாளில் கல்லூரியில் சமர்பித்து, விண்ணப்பங்களை சரிபார்த்த பின்னர் நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வழங்கப்படும்.
- நுழைவுத் தேர்வு இரு முறைகளில் (அரபி மற்றும் உலகக் கல்வி) நடத்தப்படும்.
- அரபித் தேர்வில் மாணவர்கள் குர்ஆனை பார்த்து ஓதுவது அடுத்தடுத்த அரபி தேர்வுகளுக்கான அடிப்படைத் தகுதியாக (BASIC QUALIFICATION) எடுத்துக் கொள்ளப்படும்.
- உலகக் கல்வியில் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என இருவகையான தேர்வுகள் நடத்தப்படும்.
- உலகக் கல்வியில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் படித்தல்,எழுதுதல் (reading, writing) அடிப்படை தகுதியாக (BASIC QUALIFICATION) எடுத்துக் கொள்ளப்படும்.
- எழுத்துத் தேர்வில் 8-ஆம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.
- நுழைவுத் தேர்வில் அரபி மற்றும் உலகக் கல்வியில் மாணவர்கள் எடுத்த ஒட்டு மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யபடுவார்கள்.
- சிபாரிசுகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
கட்டண விபரங்கள் – FEE DETAILS :
நுழைவுத் தேர்வின் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் தங்களின் அடுத்தடுத்த வகுப்பிற்கான அரபி பாட புத்தகங்கள், பள்ளிப் பாடப் புத்தகங்கள் மற்றும் தேவையான பயிற்சி ஏடுகளை (Note Book) மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் அதற்குரிய தொகையை செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும்.
கல்லூரியில் பட்டம் பெற்ற மஹ்தி ஆலிம்கள்:
நம்முடைய ஜாமிஆ அல்ஹுதா அரபிக் கல்லூரியில் பட்டம் பெற்ற மஹ்திகள் தீனியாத் மதரஸாக்களில் உஸ்தாதுகளாகவும், மஸ்ஜிதுகளில் இமாம்களாகவும், இஸ்லாமிய மெட்ரிகுலேசன் பள்ளிகளில் ஆசிரியர்களாகவும், அரபிக் கல்லூரிகளில் பேராசிரியர்களாகவும் பரவலாக சிறப்பான முறையில் சமுதாய சேவையாற்றி வருகின்றனர்.
இதுபோன்று எதிர்வரும் காலங்களில் தங்களுடைய பிள்ளைகள் நம்முடைய ஜாமிஆ அல்ஹுதா அரபிக் கல்லூரியில் சேர்ந்து பயின்று, பன்முகத் திறமை கொண்ட ஆலிம்களாகவும், உலகக் கல்விப் பட்டதாரிகளாகவும் உருவாக வல்ல இறைவன் அருள்பாலிப்பானாக…
ஆமீன்..