+91 97862 50250, 78451 34343 jamia.alhudha@gmail.com
அஃப்ழலுல் உலமா பட்டயம் :

சென்னைப் பல்கலைக் கழகத்தின் மூலம் அரபி மொழி பட்டயப் படிப்பான, அஃப்ழலுல் உலமா படிப்பிற்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள் இறுதி இரண்டு வருட மாணவர்களுக்கு நடத்தப்படுகின்றது.

கணினி சார்ந்த பயிற்சிகள் :

நவீன கால மாற்றத்திற்கேற்ப கணினியின் பயன்படுத்துதலையும் , அதன் பயன்பாட்டையும் மாணவர்கள் அறிந்துக் கொள்ள கணினி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றது.

மாணவர்கள் எளிமையாக கணினியைக் கற்பதற்கு அதிகமான செய்முறை பயிற்சிகள் வழங்கப்படுவதோடு கணினி வகுப்புகள் Projector மூலமாக நடத்தப்படுகின்றது.

மூன்று வருடங்கள் (Basic, Level–I, Level-II) என்ற அடிப்படையில் நடத்தப்படும் DCA – (Diploma in computer applications) பட்டயம் ஆலிம் பட்டத்தோடு சேர்த்து வழங்கப்படுகின்றது.

பேச்சுப் பயிற்சி :

கல்லூரி முதல்வர் M.மெளலானா மெளலவி சதீதுத்தீன் ஃபாஜில் பாகவி ஹள்ரத் அவர்களின் சீரிய வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியின் அடிப்படையில், மார்க்க நெறிகளையும் அதன் சட்டத்திட்டங்களையும் படித்தவர்கள் முதல் பாமர மக்கள்வரை எளிமையாக கொண்டு சேர்க்கும் முறையில், மாணவர்களுக்கு பேச்சுப் பயிற்சி வழங்கப்பட்டு ஞாயிறு, திங்கள், வியாழன் ஆகிய தினங்களில் மும்மொழிகளில் (ARABIC,TAMIL,ENGLISH) பேச்சுப் பயிற்சி மன்றங்களும் நடத்தப்படுகின்றது.

மேலும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கருத்தரங்கம் மற்றும் பட்டிமன்ற பயிற்சிகளும் வழங்கப் படுகின்றது.

எழுத்துப் பயிற்சி :

மாணவர்களின் எழுத்தாற்றலை ஊக்குவிக்கும் வகையில் அல் ஹுதா சிற்றிதழ் – என்ற மும்மொழி (ARABIC,TAMIL,ENGLISH)  இதழை மூன்று மாதத்திற்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது.

மாணவர்களால் மட்டுமே எழுதப்பட்டு கல்லூரிப் பேராசிரியர்களின் மேற்பார்வையில், கட்டுரைகள், துணுக்குகள், கதைகள் இவைகளால் உருவாக்கப்படும் அல் ஹுதா சிற்றிதழ் தமிழ், ஆங்கிலம், அரபி (TAMIL, ENGLISH, ARABIC) ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிடப்படுகின்றது.

சிறந்த வழிகாட்டல் :

மாணவர்களின் கல்வித் திறன்களையும் நல்லொழுக்கங்களையும்  வளர்த்துக் கொள்ள, எதிர்கால சவால்களை திறமையாக எதிர் கொள்ள, மூத்த உலமாப் பெருமக்கள், அரபிக் கல்லூரி முதல்வர்கள், பல்கலைக் கழக விரிவுரையாளர்கள், நாடறிந்த பேச்சாளர்கள் பலரும் நம் ஜாமிஆ அல்ஹுதா அரபிக் கல்லூரிக்கு அடிக்கடி வருகை தந்து சிறப்பு அமர்வுகள் மூலம் பயனுள்ள வழிகாட்டல்களை மாணவர்களுக்கு வழங்கி அவர்களின் கல்வி வளர்சிக்கு துஆ செய்கிறார்கள்.

நூலகம் :

அறிவாற்றலையும் சொல்லாற்றலையும்  வளர்த்துக் கொள்ள மார்க்கம் சார்ந்த மற்றும் பொது நூல்கள் மூலம் மும்மொழிகளில்(ARABIC,TAMIL,ENGLISH)  நூலகம் அமைக்கப்பட்டு, பாடத்தின் ஒரு பகுதியாக அதனை மாணவர்கள் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் அன்றாட செய்திகளை அறிந்துகொள்ள  தினசரி தமிழ் , ஆங்கிலம் (TAMIL, ENGLISH)  பத்திரிக்கைகள் மற்றும் இஸ்லாமிய மாத இதழ்கள் தருவிக்கப் படுகிறது.

கிராஅத் :

தமிழகத்தின் தலை சிறந்த காரிகளை வைத்து சிறப்பு வகுப்புகளின் மூலம் சிறந்த இமாமத் பயிற்சியும்,  கிராஅத் பயிற்சியும் பிரத்தியேகமாக வழங்கப் படுவதோடு கிராஅத் பயிலரங்குகளுக்கும் மாணவர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள் .

அரபு மொழி பயிற்சி அமர்வுகள் :

               சென்னைப் பல்கலைகழகம் (MADRAS UNIVERSITY) மற்றும் சென்னை புதுக் கல்லூரி (THE NEW COLLEGE)-யின் அரபித்துறைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் நடைபெறும் அரபி மொழிக்கான சிறப்பு அமர்வுகள் (SPECIAL SESSIONS) மற்றும் கருத்தரங்குகளில் (SEMINAR) மாணவர்கள் பங்கு பெறுவதோடு அரபு மொழி கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளிலும் பங்குபெற வைக்கப்படுகின்றது.

அவ்வாறு பங்கு பெறும் நம்முடைய ஜாமிஆ அல்ஹுதா அரபிக் கல்லூரி மாணவர்கள், அரபு மொழிகளில் தங்களின் கருத்துக்களை செம்மையாக பதிய வைப்பதோடு அதற்கான சிறப்புச் சான்றிதழ்களையும் பெற்று வருகின்றனர் (அல்ஹம்துலில்லாஹ்).

ஆன்மீக அமர்வுகள்:

ஒவ்வொரு நாளும் காலை பஜ்ர் மற்றும் மக்ரிஃப் தொழுகைகள் முடிந்தவுடன் மாணவர்களின் புனிதமிகு குர்ஆன் திலாவத் நடைபெறும்.

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் மாணவர்களின் புர்தா மஜ்லிஸ் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது.

மேலும் ஒவ்வொரு மாதத்தின் இறுதி வியாழக்கிழமையில் நடைபெற்று வரக்கூடிய சிறப்புமிகு திக்ர் மஜ்லிஸிலும் மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.

குர்ஆன் திலாவத் – திக்ர் – புர்தா-வின் இறுதியில் மாணவர்கள், காலஞ்சென்ற நம்முடைய மஹல்லாவாசிகள் முன்னோர்கள் மற்றும் உலக முஸ்லிம்களுக்காக துஆ செய்து வருகின்றனர்.

விளையாட்டு மற்றும் நடை பயிற்சி :

மாணவர்களின் உடல்நலத்தை சீர்படுத்தும் வகையில் தினமும் அஸர் தொழுகை முடிந்ததிலிருந்து மக்ரிஃப் வரையில் நடை பயிற்சி (Walking)-க்காக  வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நம் அரபிக் கல்லூரிக்கு அருகிலிருக்கும் விளையாட்டு மைதானத்திற்கு சென்று கிரிக்கெட் (CRICKET), இறகு பந்து (SHUTTLECOCKS), கைப்பந்து (VOLLEYBALL) உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாடுவதற்கும் வகை செய்யப்பட்டுள்ளது.