+91 97862 50250, 78451 34343 jamia.alhudha@gmail.com
நிபந்தனைகள்:

  • பெற்றோர்கள் பாட  நேரங்களில்  மாணவர்களை சந்திக்க / தொலைபேசியில் தொடர்பு கொள்ள அனுமதி கிடையாது.
  • பெற்றோர்கள் தங்கள்  குழந்தைகளை  சந்திப்பதற்கு  ஞாயிற்று கிழமையில் பாடம் அல்லாத நேரங்களில்  மட்டுமே அனுமதி  வழங்கப்படும்.
  • பெற்றோர்களின் வருகை  மற்றும்  போன்  தொடர்புகள்  மாணவர்களை  பாதிக்காத வகையிலும்,  கல்லூரி சட்டத்திற்கு  உட்பட்டும்  இருக்க  வேண்டும்.
  • செல்போன் மற்றும்  இதர  எலக்ட்ரானிக்  பொருட்கள்  பயன்படுத்தவோ, வைத்திருக்கவோ  கூடாது.
  • உடல் ரீதியான பாதிப்புகள்  பற்றிய  தகவலை  முன்னரே  தெரிவிக்க  வேண்டும்.
  • ஏழு வருடம்  முழுமையாக  கல்லூரியில்  பயில  வேண்டும்.  இடையில் நிற்கும் மாணவர், கல்லூரி  எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்பட  வேண்டும்.
  • தொழுகை மற்றும்  ஏனைய  இபாதத்துக்களை ஒழுக்கத்துடன்  கடைபிடிக்க வேண்டும்.
  • அஸருக்குப்பின் மட்டுமே  வெளியே செல்ல அனுமதி உண்டு. மற்ற நேரங்களில் அனுமதியின்றி வெளியே செல்லக்கூடாது.
  • மதரஸா மற்றும் பள்ளிவாசல் வளாகத்திற்குள்ளோ, வெளியிலோ கூட்டமாக நின்று பேசவோ, சப்தமிடவோ கூடாது.
  • விடுமுறைக்கு செல்லும் மாணவர்கள் உரிய நேரத்தில் வரவேண்டும்.
  • உணவு மற்றும் ஓய்வு நேரங்களில் மற்ற வேலைகளில் ஈடுபடக்கூடாது.
  • மாணவர்கள் மதரஸா சீருடையான வெள்ளை ஜிப்பா, வெள்ளை கைலி, வெள்ளை கை பனியன் மற்றும் வெள்ளை தொப்பி ஆகியவை மட்டுமே அணிய அனுமதி உண்டு.
  • மாணவர்கள் சம்மந்தமான எவ்வித தொடர்புக்கும் கல்லூரியின் முதல்வர் மற்றும் துணை முதல்வரை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்.
  • தேர்ச்சி பெற்ற மாணவர்கள்,

1.மாற்றுச் சான்றிதழ் (Original TC)

2.மஹல்லா ஜமாஅத் கடிதம்

3.ரேசன்கார்டு (நகல்)

         4. ஆதார் (நகல்)

         5.பிறப்புச்சான்றிதழ் (நகல்) ஆகியவைகளை எடுத்து வர வேண்டும்.

நிபந்தனைகளை மீறும் மாணவர்கள் மீது மதரஸாவின்

 நடவடிக்கையே  இறுதியானது.